அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோய் பரவலை தடுக்க ஒத்துழைப்பு அவசியம்

Updated : மே 15, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ''கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, பொது மக்கள் கையில் தான் உள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது:ஊரடங்கு உத்தரவு, மார்ச், 24ல் பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மத்திய-- மாநில
நோய் பரவல், ஒத்துழைப்பு அவசியம்  :முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ''கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, பொது மக்கள் கையில் தான் உள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது:ஊரடங்கு உத்தரவு, மார்ச், 24ல் பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மத்திய-- மாநில அரசுகள் தெரிவித்த வழிமுறைகளை கடைப்பிடித்து, நோய் தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டீர்கள்.


தடுப்பது சுலபமல்லவைரஸ் நோய், முதலில் சிறிதளவு பரவி, பின் உயர்ந்து, அப்புறம் தணியும் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல் தான் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின்படி, தமிழக அரசு செயல்பட்டதால், தமிழகத்தில், நோய் பரவலை தடுக்க முடிந்துள்ளது.கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது. அரசு விதிமுறைகளை, பொது மக்கள் கடைப்பிடித்தால், தொற்று பரவலை தடுக்க முடியும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், தடுப்பது சுலபமல்ல.எனவே, அரசின் அறிவிப்பை ஏற்று, மக்கள் செயல்பட வேண்டும். நோய் பரவலை தடுப்பது, பொதுமக்கள் கையில் தான் உள்ளது.மக்களுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், தடையின்றி கிடைக்கின்றன. ஏழை மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இறப்பு விகிதம் குறைவுதமிழகத்தில், உணவு பஞ்சம் என்ற, பிரச்னை இல்லை. வேளாண் பணிகளுக்கு, எந்த தடையும் கிடையாது. மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி, ஊரகப் பகுதிகளில், தொழிற்சாலைகள் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக செயல்பட்டதால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தன. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.நோய் பரவலை தடுக்க வேண்டும்; மக்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்ற எண்ணத்துடன், அரசு செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது.நோய் தடுப்பு பணியில், அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், அதிகளவில் நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில், வெற்றி கண்டுள்ளோம். அதே நேரத்தில், நோய் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகமான சோதனைகள் செய்யப்படுவதால், அதிக எண்ணிக்கை வருகிறது. பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோம். முறையான சிகிச்சை காரணமாக, இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை, 27 சதவீதமாக உள்ளது.


அரசு உதவிமக்கள் அச்சப்படத் தேவையில்லை; தொற்று ஏறி தான் இறங்கும். நோய் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்கள் குணமடைய, அரசு உதவி செய்யும்.கோடை காலத்தில், குடிமராமத்து திட்டத்தை, அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டும், குடிமராமத்து திட்டத்தை, கலெக்டர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும். மழை காலத்தில், தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு, விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். டெல்டா பாசன மாவட்டங்களில், நீர்நிலைகளை துார் வாரும் பணிகளை முடுக்கி விட வேண்டும்.அணைகளில் நீர் உள்ளது. எனவே, விரைவாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மாநிலத்தில் தொழில் சிறக்கவும், விவசாயம் சிறக்கவும், அரசு பாடுபடும்.இவ்வாறு, அவர் பேசினார்.


மே, 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?தமிழகத்தில், மூன்றாம் கட்ட ஊரடங்கு, வரும், 17ம் தேதியுடன் முடிகிறது. சென்னை உட்பட சில மாவட்டங்களில், நோய் பரவல் அதிகமாக உள்ளதால், ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்படாது. வரும், 31 வரை, தற்போதைய ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று முதல்வர் ஆலோசனை நடத்தியபோது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இன்னும் சில நாட்களுக்கு பின், அப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.


முக கவசமும், சமூக இடைவெளியும்''பொதுமக்கள், வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அனாவசியமாக, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், மக்களிடம், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:சென்னை, கோயம்பேடு மார்க்கெட், மிகப் பெரியது. இங்கு, 20 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தோம். துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள், பல முறை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர்.அவர்கள் வேறு இடம் செல்ல மறுத்து விட்டனர். வேறு இடம் சென்றால், தங்களின் வியாபாரம் பாதிக்கும் எனக்கூறி, ஒத்துழைக்க மறுத்ததால், இந்நிலை ஏற்பட்டது. கோயம்பேடில் இருந்து, ஏராளமானோர் வெளி மாவட்டங்கள் சென்றதால், அங்கும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நோய் பரவல் ஏற்பட்டதும், மார்க்கெட் மூடப்பட்டது. வியாபாரிகளை அழைத்து பேசி, திருமழிசையில் மார்க்கெட் அமைக்கப்பட்டது. அரசை பொறுத்தவரை, நோய் பரவலை தடுக்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அரசு முயற்சி எடுக்கவில்லை என்பது, உண்மைக்கு புறம்பானது.அனைத்து துறையினரும், மக்களுக்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் வழியாகவே, நோய் பரவலை தடுக்க முடியும்.வெளியில் செல்லும் போது, அனைவரும் கண்டிப்பாக, முக கவசம் அணிய வேண்டும். தேவையின்றி, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இதை செய்தால், நோய் பரவலை தடுக்க முடியும்.உள்ளாட்சி பகுதிகளில், தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொது கழிப்பறைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களின் தேவைகளை, பூர்த்தி செய்ய வேண்டும்.கோடை காலத்தில், குடிநீர் பிரச்னை ஏற்படாமல், மாவட்ட கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல, தேவையான போக்குவரத்து வசதிகளை, செய்து கொடுக்க வேண்டும்.தமிழகத்தில், தொழிற்சாலைகள் அதிகம். பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், 50 சதவீத பணியாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம்.அரசு அறிவித்த கடைகளை அனுமதிக்கலாம். விதி மீறிய, கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடை திறக்க அனுமதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:45:00 IST Report Abuse
Lion Drsekar Govt is going below the ground level and begging to co operate with the officials to stop spreading this virus . It is the first time in spite of issuing 144 appealing and requesting to co operate ?? If it continues in future people will not wear helmet and never follow any laws and rules. Because anti movements are becoming so powerful and achieving their goals . It is a great successful achievements for their attempts. Total failure to the Govt, All credit goes to the Vote banks, vnadhe madaram
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் கரோனா பரவாமல் செய்ய போதிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காமல் இருந்துவிட்டு, கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற வணிகர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதல்வர் வியாபாரிகள் மீது பழி சுமத்துகிறார். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமே கரோனா பரவலுக்குக் காரணம்" எனக் குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கியதோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக எண்ணாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Rate this:
Cancel
14-மே-202014:19:35 IST Report Abuse
ஆப்பு இப்பிடிப் பேசி பேசி இன்னும் கொஞ்ச நாளில் கொரோனாவோட வாழக் கற்றுக் கொள்ளுங்கள்னு சொல்வாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X