சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க ஐகோர்ட்டில் வழக்கறிஞர் வழக்கு

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : -பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஸ்டாலின் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 1 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ௧ வகுப்பில் சில பாடங்களுக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொது தேர்வை எழுதுவர். பள்ளிகளில், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம். மாணவர்களுக்கு வயது முதிர்ச்சி கிடையாது. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால், வைரஸ் தொற்று அதிகரிக்கும்.

வைரஸ் தொற்றால், பல பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஏற்கனவே கஷ்டமான சூழ்நிலையில் இருப்பர். அவர்களால் தொடர்ந்து படித்து, தேர்வு எழுதுவது கடினம். பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பஸ்கள் இயக்கப்பட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலே இருக்கும். சி.பி.எஸ்.இ., தேர்வு கூட, ஜூலை, 1ல் தான் துவங்குகிறது.

வைரஸ் தொற்றே இல்லை என்ற, நிலை உருவான பின், பொது தேர்வை நடத்தக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். எனவே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
14-மே-202020:15:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டு வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிக்கனும் . எதை எதை வழக்கு தொடுக்கனும் என்பதை கோர்ட் விதிமுறை வகுக்கனும். கல்விக்கு என அமைச்சகம் அமைச்சர் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் கவனிப்பர் வக்கீலுக்கு வழக்கு ஏதும் சிக்கலையோ பாவம். கோர்ட் அதன் வேலையை செய்ய விடனும் .ஆளுகைக்கு உட்படாத சங்கதிகளை அது கவனம் கொண்டு வேலை பளுவை உண்டாக்கி கொள்ளாமல் இருத்தல் நல்லது எனலாம். தீர்வு காண வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன.அதை கவனம் கொண்டு தீர்த்தால் பாராட்டலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X