கார்த்தி செலுத்திய ரூ.10 கோடி திரும்ப தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : மே 13, 2020
Share
Advertisement
 கார்த்தி செலுத்திய ரூ.10 கோடி திரும்ப தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்வதையொட்டி செலுத்திய, 10 கோடி ரூபாய் பிணைத் தொகையை திரும்பத் தர, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்., மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, அவர் மூலம், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, விதிமுறைகளை மீறி அன்னிய முதலீடு பெற்று தந்து, ஆதாயம் பெற்றதாக, கார்த்தி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை, கார்த்தி மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் கார்த்தி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 10 கோடி ரூபாய் பிணை தொகை செலுத்தி, வெளிநாட்டிற்கு சென்றார். மீண்டும் இந்தியா வந்த அவர், பிணைத் தொகையை திரும்பத் தரக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் செலுத்திய தொகையை திரும்பத் தர ஆட்சேபனை இல்லை என, அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கார்த்தி செலுத்திய, 10 கோடி ரூபாயை திருப்பித் தருமாறு, உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு, அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X