சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.சி.ஆர்., கருவிக்கு தட்டுப்பாடு பரிசோதனை எண்ணிக்கை குறைந்தது

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனாவின் மரபணு கண்டறிய உதவும், பி.சி.ஆர்., பரிசோதனை கருவிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் வாயிலாக, பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது.தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை ஆய்வகங்கள் அதிகப்படுத்தப்பட்டன. அதன்படி, அரசு, 38; தனியார், 17 என, 55 ஆய்வகங்கள் உள்ளன. இம்மாதம், 7 வரை, தினமும், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், பி.சி.ஆர்., கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஆய்வகங்களில், 3 லட்சம் பரிசோதனை கருவிகள் இருந்தன. அதில், நேற்று முன்தினம் வரை, 2.77 லட்சம் கருவிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.பி.சி.ஆர்., கருவி தட்டுப்பாடு காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்களில், அறிகுறி இருப்பவர்கள், பரிசோதனை செய்யாமல் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.குறிப்பாக, துாத்துக்குடி அரசு மருத்துவமனையில், பி.சி.ஆர்., கருவி இல்லை எனக்கூறிய, டீன் திருவாசகமணி அதிரடியாக மாற்றப்பட்டார்.

இதனால், தினமும், 14 ஆயிரம் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில், 11 ஆயிரம் அளவில் தான் பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும், அரசு ஆய்வகங்களில், பி.சி.ஆர்., கருவி தட்டுப்பாடு காரணமாக, தற்போது, தனியார் ஆய்வகங்களில் தான், அதிகளவு பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை தான், பல மாவட்டங்களில் நிலவுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பல்வேறு நாடுகளில் இருந்து, 11 லட்சம், பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த கருவிகள், ஓரிரு நாட்களில், தமிழகத்திற்கு வந்து சேரும்.அதிக பாதிப்பு உள்ள, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, முக்கியத்துவம் அளித்து, பரிசோதனை செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தமிழகத்தில் தற்போது உள்ள, பி.சி.ஆர்., கருவிகள் கையிருப்பு குறித்து, மருத்துவ பணிகள் மேலாண்மை இயக்குனரிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X