வீடு தேடி வரும் மதுபானம் மஹா.,வில் நாளை துவக்கம்

Added : மே 13, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம் முழுதும், நேரடியாக வீடுகளுக்கு மது விற்பனை செய்யும் திட்டம், நாளை துவங்குகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசிவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.இம்மாநிலத்தில், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மது கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, வீடுகளில் நேரடியாக விற்பனை செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, மாநில கலால் துறையின் அறிவிப்பு:மாநிலம் முழுதும், வீடுகளுக்கு, நேரடியாக மது விற்பனை செய்யும் பணிகளை, நாளை முதல் துவங்கலாம்.

இதற்காக, ஒரு கடையில், 10 நபர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும். அவர்கள், ஒரு முறை, 24 மது பாட்டில்களுக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. மது பாட்டிலில் உள்ள, அதிகபட்ச சில்லறை விலைக்கு கூடுதலாக, பணம் வசூலிக்கக் கூடாது.இந்த நடைமுறை, விற்பனையாளர் மற்றும் வாங்குவோருக்கு இடையேயான, எழுதப்படாத ஒப்பந்தம் என்பதால், அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்காது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X