கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யக்கோரி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் அங்கையற்கண்ணி தலைமையில் கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் கிரண்குராலாவிடம் அளித்துள்ள மனு:கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து தி.மு.க., சார்பில் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் அவசர கோரிக்கைகளை சேகரித்து நிவர்த்தி செய்யும் பொருட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான கோரிக்கைகள் பெறப்பட்டன. 15 லட்சத்திற்கும் மேலானவர்கள் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதில், மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் தொண்டர்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்டன.பொதுமக்களுக்கு தொடர்ந்து நாங்கள் உதவிகள் செய்யும் நிலையில், அவர்களது கோரிக்கைகளை உங்களது கவனத்திற்கும் கொண்டு வருகிறோம். அரசின் அதிகாரம், செயல்திறனைக் கொண்டு மக்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.உதவி எண் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை, உரிய தகவல்களுடன் தங்களிடம் அளிக்கிறோம். அவற்றிற்கு முன்னுரிமை அளித்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நகர செயலர் சுப்ராயலு உட்பட தி.மு.க., வினர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE