விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரண உதவி

Added : மே 13, 2020
Share

தியாகதுருகம்; முடியனுாரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 45 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளிகள் 45 பேர், கடந்த வாரம் மினி லாரியில் வேலைக்குச் சென்ற போது எலவனாசூர்கோட்டை அருகே விபத்தில் சிக்கினர். இதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 43 பேர் படுகாயம் அடைந்தனர்.விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., பிரபு தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி, சமையல் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார். இறந்தவர் குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலர் அய்யப்பா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் குமாரசாமி, ராஜேந்திரன், குமரவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், செந்தில்குமார், மணிவண்ணன், கதிர்வேல், ரமேஷ், ராமன், சாமிதுரை, கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X