290 கைதிகளுக்கு ஜாமின்

Added : மே 13, 2020
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவரில், பள்ளி ஒன்றில், 2014ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதல் தொடர்பாக, 641 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, ராணுவ நீதிமன்றம் விசாரித்தது. இதில், 345 பேருக்கு மரண தண்டனையும், 296 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட, 345 பேரில், 56 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, 290 பயங்கரவாதிகள், பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 290 பேருக்கும் ஜாமின் வழங்கியது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமின்றம், 290 பயங்கரவாதிகளுக்கும் அளிக்கப்பட்ட ஜாமினுக்கு தடைவிதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X