சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற மூவர் கைது

Added : மே 13, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நத்தாமூர் கிராமத்தில் உள்ள செல்வபாண்டியன் என்பவரின் நிலத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, ஊறலில் சாராயம் காய்ச்சி, விற்பனைக்கு வைத்திருந்த 100 லிட்டர் சாராயம், 100 லிட்டர் ஊறல் ஆகியவற்றை கொட்டி அழித்து, நத்தாமூர் ராஜாமாணிக்கம் மகன் செல்வபாண்டியன், 26; என்பவரை கைது செய்தனர்.மற்றொரு வழக்குதிருநாவலுார் தொப்பையான்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றனர். அங்கு, நிலத்தில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த தஷ்ணமூர்த்தி மகன் ரத்தினவேல், 25; சந்திரகாச பாண்டியன், 45; ஆகியோரை கைது செய்து, 100 லிட்டர் சாராயம் மற்றும் ஊறலை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X