பொது செய்தி

இந்தியா

612 ரயில்களில் ஊர் திரும்பிய 8 லட்சம் தொழிலாளர்கள்

Added : மே 13, 2020
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா ஊரடங்கால், பல்வேறு மாநிலங்களில் தவித்த, எட்டு லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 612 சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர் திரும்பினர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், பல்வேறு மாநிலங்களில் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்வதற்காக, கடந்த, 1ம் தேதி முதல், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, நேற்று வரை இயக்கப்பட்ட, 612 ரயில்கள் மூலம், எட்டு லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றடைந்துள்ளனர்.இவற்றில் அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்திறகு, 301 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக பீஹாருக்கு, 169; ம.பி.,க்கு 53; ஜார்கண்டுக்கு, 40; ஒடிசாக்வுக்கு, 38; ராஜஸ்தானுக்கு, 8; மேற்கு வங்கத்திற்கு, 7; சத்தீஸ்கருக்கு, 6, மற்றும் உத்தரகண்டுக்கு, 4 ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன.ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு தலா மூன்றும், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், மிசோரம், தமிழகம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு, தலா ஒரு ரயிலும் சென்றுள்ளன.முன்னதாக ஒரு ரயிலில், 1,200 பயணியர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மே, 11 முதல், 1,700 தொழிலாளர்கள் செல்கின்றனர்.முதலில், இடைநிறுத்தம் இல்லாமல் ரயில்கள் சென்ற நிலையில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X