சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : மே 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்: சொந்த மாநிலத்திற்குச் செல்ல அனுமதிக்கோரி வட மாநில தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் வழுதரெட்டியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி, ஜூஸ் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவால், வேலையின்றி வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், தங்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல, ஆன் லைன் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை. இதனால், வட மாநில தொழிலாளர்கள் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, சொந்த மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி பெற்றுத்தருவதாக கூறினர். இதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X