ஊரடங்கு உத்தரவை மீறியதாகவிழுப்புரத்தில் 9,743 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறியதாகவிழுப்புரத்தில் 9,743 பேர் கைது

Added : மே 13, 2020
Share

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றிய 9,743 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 12ம் தேதி மட்டும் 105 வழக்குகள் பதிவு செய்து, 112 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 12ம் தேதி வரை 9,625 வழக்குகள் பதிவு செய்து, 9,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,082 இருசக்கர வாகனங்கள், 123 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 157 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X