அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக கவசமும், சமூக இடைவெளியும் தான் நோய் பரவலை தடுக்கும் வழி

Added : மே 13, 2020
Share
Advertisement
 முக கவசமும், சமூக இடைவெளியும் தான் நோய் பரவலை தடுக்கும் வழி

''பொதுமக்கள், வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். அனாவசியமாக, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், மக்களிடம், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:சென்னை, கோயம்பேடு மார்க்கெட், மிகப் பெரியது. இங்கு, 20 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தோம். துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள், பல முறை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அவர்கள் வேறு இடம் செல்ல மறுத்து விட்டனர். வேறு இடம் சென்றால், தங்களின் வியாபாரம் பாதிக்கும் எனக்கூறி, ஒத்துழைக்க மறுத்ததால், இந்நிலை ஏற்பட்டது.

கோயம்பேடில் இருந்து, ஏராளமானோர் வெளி மாவட்டங்கள் சென்றதால், அங்கும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.நோய் பரவல் ஏற்பட்டதும், மார்க்கெட் மூடப்பட்டது. வியாபாரிகளை அழைத்து பேசி, திருமழிசையில் மார்க்கெட் அமைக்கப்பட்டது. அரசை பொறுத்தவரை, நோய் பரவலை தடுக்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அரசு முயற்சி எடுக்கவில்லை என்பது, உண்மைக்கு புறம்பானது.அனைத்து துறையினரும், மக்களுக்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதன் வழியாகவே, நோய் பரவலை தடுக்க முடியும்.வெளியில் செல்லும் போது, அனைவரும் கண்டிப்பாக, முக கவசம் அணிய வேண்டும். தேவையின்றி, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இதை செய்தால், நோய் பரவலை தடுக்க முடியும்.உள்ளாட்சி பகுதிகளில், தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பொது கழிப்பறைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களின் தேவைகளை, பூர்த்தி செய்ய வேண்டும்.

கோடை காலத்தில், குடிநீர் பிரச்னை ஏற்படாமல், மாவட்ட கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல, தேவையான போக்குவரத்து வசதிகளை, செய்து கொடுக்க வேண்டும்.தமிழகத்தில், தொழிற்சாலைகள் அதிகம். பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், 50 சதவீத பணியாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம்.அரசு அறிவித்த கடைகளை அனுமதிக்கலாம். விதி மீறிய, கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடை திறக்க அனுமதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

மே, 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?தமிழகத்தில், மூன்றாம் கட்ட ஊரடங்கு, வரும், 17ம் தேதியுடன் முடிகிறது. சென்னை உட்பட சில மாவட்டங்களில், நோய் பரவல் அதிகமாக உள்ளதால், ஊரடங்கு முழுமையாக விலக்கி கொள்ளப்படாது. வரும், 31 வரை, தற்போதைய ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று முதல்வர் ஆலோசனை நடத்தியபோது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இன்னும் சில நாட்களுக்கு பின், அப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X