பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவில் தளர்வு: திரும்பியது இயல்பு வாழ்க்கை

Added : மே 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டதால், விழுப்புரம் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு பகுதிகளான 93 பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் ஊரங்கு உத்தரவில் நேற்று முன்தினம் கலெக்டர் அண்ணாதுரை தளர்வுகள் அளித்தார்.இதில், டீ கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறிகள் மற்றும் பலசரக்கு கடைகள், மின் சாதனப்பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மொபைல் போன் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கண்கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள், சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை), சிறிய ஜவுளிக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும், மிக்ஸி, கிரைண்டர் பழுதுநீக்கும் கடைகள், பெட்டி கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள், எலக்ட்ரிகல் கடைகள் ஆகியவை செயல்படலாம் என அறிவித்தார்.அதன்படி, விழுப்புரம் நகரில் கடந்த 24ம் தேதிக்கு பிறகு நேற்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் நகருக்குள் வந்ததால், சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வால், விழுப்புரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X