பொது செய்தி

தமிழ்நாடு

சாலை தடுப்புகள் அகற்றம்

Added : மே 13, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சாலைகளில் அமைக்கப்பட்ட தடைகள் அகற்றப்பட்டன.தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் வாகன போக்குவரத்தை குறைக்கும் விதமாக கள்ளக்குறிச்சியின் முக்கிய சாலைகள், தெருக்களின் சந்திப்புகளில் தடுப்புக்கட்டைகள் மூலமாக தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த கடந்த சில தினங்களாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முற்றிலுமாக முடங்கிப்போயிருந்த கள்ளக்குறிச்சி நகரம் முழுவீச்சில் செயல்பட துவங்கியது. ஆனால் தடை ஏற்படுத்தி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் எதுவும் அகற்றப்படாமல் விடப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்ட தடுப்புக்கட்டைகள் மட்டும் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுபாட்டுக்குள் வந்தன. ஆனால் தெருக்களின் சந்திப்புகள், பிரதான சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், அமைப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைக்கப்பட்ட தடுப்பக்களை முழுமையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X