பொது செய்தி

தமிழ்நாடு

நகை வியாபாரிகள் சங்கத்தினர் டி.எஸ்.பி., யுடன் பேச்சுவார்த்தை

Added : மே 13, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் நகைக் கடைகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் டி.எஸ்.பி.,யுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தமிழகத்தில் பல்வேறு வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து கடந்த 10ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.திருக்கோவிலுாரில் நகைக் கடைகளை திறக்க போலீசார் அனுமதி மறுத்து மூடினர். இந்நிலையில் நேற்று நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கோவிந்து உள்ளிட்ட பலரும் டி.எஸ்.பி., மகேைஷ முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.அரசின் உத்தரவை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் 10க்கு10 அளவுள்ள சிறிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் எனவும், தனி நபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசின் அறிவிப்பை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்கலாம் எனக் கூறினார்.இதன் மூலம் இன்று சிறிய நகை கடையில் திறக்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X