அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நிவாரணம் ரூ.84 கோடி ஒதுக்கீடு ; முதல்வர் இபிஎஸ்

Updated : மே 14, 2020 | Added : மே 13, 2020
Share
Advertisement
 தொழிலாளர் நிவாரணம் ரூ.84 கோடி ஒதுக்கீடு ; முதல்வர் இபிஎஸ்

சென்னை : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, இரண்டாம் கட்டமாக, 1,000 ரூபாய், நிவாரண தொகை வழங்க, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 83.99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மார்ச், 24ல், முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டார். அடுத்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும், இரண்டாம் கட்டமாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.அதன்படி, பல்வேறு வாரியங்களை சேர்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்கள், 8.39 லட்சம் பேருக்கு, தலா, 1,000 ரூபாய் வழங்க நிதி ஒதுக்கும்படி, வருவாய் நிர்வாக ஆணையர், அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

அதை பரிசீலனை செய்த அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 83.99 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X