பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடக்கூடாது; கள்ளக்குறிச்சியில் போலீசார் மைக் மூலம் அறிவுரை

Added : மே 13, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா தொற்று ஊரடங்கு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கள்ளக்குறிச்சியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.இந்நிலையில் கலெக்டர் கிரண்குராலா, எஸ்.பி., ஜெயச்சந்திரன் நேற்று மாலை, நான்கு முனை சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது டி.எஸ்.பி., ராமநாதன் ஒலிபெருக்கி மூலம், அனுமதி அளிக்கப்படாத ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லக் கூடாது, கடைக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை தர வேண்டும்.ஊரடங்கு அமலில் இருப்பதால் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி நிற்கக் கூடாது, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அனைத்து வணிகர்களும் கிருமிநாசினியை வைத்து தங்கள் கடையை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.நகராட்சி கமிஷனர் வெங்கடாசலம் (பொறுப்பு) துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X