சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

Added : மே 13, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரில் அனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கபட்டுள்ள ஊரடங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஓரளவு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில நிபந்தனைகளுடன் 34 வகையான கடை மற்றும் தொழில்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கபட்டுள்ளது.இதில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கபடவில்லை. ஆனால், நகர பகுதியில் பெரும்பாலான ஆட்டோக்கள் நேற்று ஓடின. இதையொட்டி அனுமதியின்றி இயங்கிய ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன், தர்மராஜ் (போக்குவரத்து) மற்றும் போலீசார் நான்கு முனை சந்திப்பு வழியாக சென்ற 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரணமின்றி ஆட்டோ கண்ணாடியில் பேப்பரால் ஒட்டபட்டிருந்த அவசரம், கோவிட்-19 ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X