பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பணிகளை துரிதப்படுத்திடதி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

Added : மே 13, 2020
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் ரவிக்குமார் எம்.பி., இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சரவணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் ரவிக்குமார் எம்.பி., இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சரவணன் ஆகியோர் அளித்துள்ள மனு:விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காமல், பரிதவித்து வருகின்றனர். மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண உதவி கேட்டு எங்களிடம் முறையிட்டுள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா பாதித்த மக்களுக்கு நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் படிப்படியாக தளர்வுகள் அளிக்க வேண்டும். அப்பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பின்றி வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X