பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மாநில தலைவர் ஆறுதல்

Added : மே 13, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு பா.ஜ., மாநில தலைவர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க., பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இறந்த ஜெயஸ்ரீ படத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும், ஜெயஸ்ரீயின் பெற்றோரிடம் 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கி ஆறுதல் கூறினார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க., அரசு, கொரோனா தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரை பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நிதி உதவிகள் எல்லாவற்றையும் வழங்கி வருகிறது. கொரோனா விஷயத்தில் தி.மு.க., அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X