சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் போலீசார் சாராய வேட்டை நடத்தி அவ்வப்போது குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட மத்திய புலனாய்வு பிரிவுக்கு நேற்று காலை வீரபாண்டியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்து. அதன்பேரில் அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம், மத்திய புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் போலீசார் குமரன், பாஸ்கர் உள்ளிட்டோர் வீரபாண்டி, டாஸ்மாக் கடை பின்புறத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் வருவதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.போலீசார் அந்த இடத்தில் சோதனை நடத்தி, அங்கிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும், 180 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அழிக்கப்பட்ட சாராய ஊறலின் மதிப்பு 1.3 லட்சம் ரூபாய் ஆகும்.விசாரணையில் தப்பியோடியவர்கள், அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் ராமலிங்கம், நாராயணன் மகன் சந்துரு, சின்னத்தம்பி மகன்கள் பழனி, ரவி என தெரியவந்தது. உடன் நால்வர் மீதும் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X