சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்ற தகராறு: 4 பேர் கைது

Added : மே 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கோனுாரைச் சேர்ந்தவர் கணபதி மகன் பிரகாஷ், 19; இவர் கடந்த 12ம் தேதி அங்குள்ள பெருமாள் கோவில் அருகே பைக்கில் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன் விஜயபிரியன், 24; என்பவரை இடிப்பது போன்று சென்றார்.இதனால், ஏற்பட்ட தகராறில் விஜயபிரியன், அவரது தந்தை அழகப்பன், 55; ஆகியோர் பிரகாைஷ திட்டி தாக்கினர். இதனால், பதிலுக்கு பிரகாஷ் மற்றும் இவரது ஆதரவாளர் சுரேஷ் மகன் சூர்யா, 19; ஆகியோர் தாக்கினர்.இது குறித்து இருதரப்பு புகாரின்பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விஜயபிரியன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X