சம்பவம் செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்சில் இரண்டுபெண்களுக்கு சுகப்பிரசவம்

Added : மே 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்சில் 2 பெண்களுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.விழுப்புரம் அடுத்த சோழகனுாரைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி பவாணி, 19; கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாஸ்கர், அவசர சிகிச்சை நிபுணர் ஜெனிதா ஆகியோர் விரைந்து சென்று பவாணியை, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியில், பவாணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.இதேபோன்று, திண்டிவனம் அடுத்த அன்னம்புத்துாரைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம் மனைவி சங்கீதா, 25; கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்த தைலாபுரத்தில் இருந்த 108 டிரைவர் ராஜா மற்றும் அவசர சிகிச்சை நிபுணர் லட்சுமணன் ஆகியோர் சங்கீதாவை, ஓமந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கும் மருத்துவமனை செல்லும் வழியில் பெண் குழந்தை பிறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X