சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா, ஓமனிலிருந்து 324 பேர் தமிழகம் வருகை

Added : மே 13, 2020
Share
Advertisement
 அமெரிக்கா, ஓமனிலிருந்து 324 பேர் தமிழகம் வருகை

சென்னை : ஓமன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் சிக்கித் தவித்த, 324 பேர், நேற்று இரண்டு சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், மே, 7 முதல், 13 வரை, சிறப்பு விமானங்களில், நம் நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை, தமிழகத்திற்கு இயக்கப்பட்ட, நான்கு சிறப்பு விமானங்களில், துபாய், மலேஷியா, குவைத் ஆகிய நாடுகளில் இருந்து, 710 பேர், அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், ஓமன் மற்றும் அமெரிக்காவில் இருந்து, இரு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

ஓமன் நாட்டின் தலைநகர், மஸ்கட்டிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, 9:55 மணிக்கு, சென்னைக்கு வந்த, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' ஐந்தாவது சிறப்பு விமானத்தில், 183 பேர் வந்தனர்.இதேபோல, அமெரிக்காவின், சிகாகோ நகரில் இருந்து, நேற்று அதிகாலை, 5:55 மணிக்கு, சென்னைக்கு வந்த, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' ஆறாவது சிறப்பு விமானத்தில், 141 பேர் வந்தனர்.இந்த விமானங்களில் வந்தவர்களுக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின் அவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்காக, தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X