சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் புயல் சின்னம் மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : 'வங்க கடலில், புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், தொடர் மழை பெய்யும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சென்னை வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:வங்க கடலில், தெற்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, மேலும் வலுப்பெற்று, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த மண்டலம், நாளை மறுநாள் வலுப்பெற்று, புயலாகும். இந்த புயல், வங்க கடலின் வடமேற்கு திசையில், தமிழகம், ஆந்திரா கடற்பகுதிகளை நோக்கி வரும்.

பின், 17ல் அதன் திசை மாறி, வட கிழக்காக, ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதிகளை நோக்கி, நகர வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், தொடர் மழை பெயர் வாய்ப்புள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும்.வங்க கடலில், தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில், 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். வரும், 16ம் தேதி முதல், சில நேரங்களில் மணிக்கு, 85 கி.மீ., வேகம் வரையிலும் சூறாவளி தாக்கும். கடல் அலைகள், மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே, மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் இருந்தால், பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வேண்டும். தற்போதைய நிலையில், இந்த பகுதிகளை நோக்கி, மீனவர்கள் செல்ல வேண்டாம்.இந்த புயல் சின்னம் குறித்து, லட்சத்தீவு, அந்தமான், கேரளா, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு, எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பருவ மழை துவக்கம்வங்க கடலில் உருவாகும் புயல் சூழல் காரணமாக, தென் மேற்கு பருவ மழை, நாளை மறுநாள், அந்தமான் பகுதிகளில் துவங்கும். பின், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கு பரவும்.

இது குறித்து, இந்திய வானிலை மைய டைரக்டர் ஜெனரல் மிருதஞ்ஜெய் மொகபத்ரா, ''இந்த ஆண்டு, ஜூன், 1க்கு முன், பருவ மழை துவங்கினாலும், இயல்பான மழை அளவில் மாற்றம் இருக்காது,'' என, தெரிவித்துள்ளார்.தென் மாவட்டங்களில்இன்று கன மழை திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக, பேராவூரணியில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. காரைக்கால், தஞ்சை கீழணை பகுதியில், 5; திருத்துறைப்பூண்டி, திருமானுாரில், 3 செ.மீ., மழை பதிவானது. திருநெல்வேலி, தென்காசி, நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X