சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய காவலர்களை பணியமர்த்துவதில் சிக்கல் பயிற்சி பள்ளிகளில் தொற்று பரவல்

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : புதிதாக தேர்வு செய்யப்பட்ட, இரண்டாம் நிலை காவலர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், அவர்களை, ஊரடங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தும் திட்டம் கைவிடப்பட உள்ளது.

காவல் துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 8,538 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 காவலர் பயிற்சி பள்ளிகளில், ஆறு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம், காவல் நிலையங்களில், நடைமுறை பயிற்சியும் அளிக்க வேண்டும்.இதற்காக, அனைவரும், மே, 3ல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, பயிற்சி பள்ளிகளில் சேர, பயிற்சி பிரிவு டி.ஜி.பி., கரண்சின்ஹா உத்தரவிட்டார்.அவர்களுக்கு ஊரடங்கு பாதுகாப்பு பணி ஒதுக்குமாறு, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் பயிற்சி பள்ளி முதல்வர்களுக்கும், அவர் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதையடுத்து, பயிற்சி பள்ளிகளில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் சேர்ந்தனர். மற்றவர்கள், வர முடியாததற்கான காரணங்கள் குறித்து கடிதம் அனுப்பினர்.இந்நிலையில், சென்னை, பரங்கிமலையில் உள்ள பயிற்சி பள்ளியில், ஒன்பது பெண் போலீசாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதேபோல, கடலுார் மாவட்ட பயிற்சி பள்ளியில், 14 பேருக்கு, தொற்று உறுதியாகி உள்ளது; அந்த பயிற்சி பள்ளி மூடப்பட்டது. இதுமட்டுமின்றி, சென்னை, ஆவடி என, பல பயிற்சி பள்ளிகளில், 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு, தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

காவலர் பயிற்சி பள்ளிகளில், கொரோனா பரவி வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.போதிய பயிற்சி இல்லாததால், இக்காவலர்களை, ஊரடங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தும் திட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X