பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு முடிந்த பின், உற்பத்தியை துவக்கும் தொழிற்சாலைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், வரும், 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், ஊரடங்கு முடிந்து திறக்கப்படும் போது, சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.அதே வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, தமிழக அரசு சார்பிலும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள, ஆலைகளை திறக்கும் போது, பைப் லைன், வால்வு போன்றவற்றை பரிசோதனை செய்ய வேண்டும்.ரசாயனம், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், மின் சாதனங்கள், வாயு பொருட்கள், கன்வேயர் பெல்ட் போன்றவற்றை, உரிய பாதுகாப்பு சாதனங்களுடன் கையாள வேண்டும்.தொழிற்சாலை இயந்திரங்களை பரிசோதித்த பின், இயக்க வேண்டும். முதலில் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்.

அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்த பிறகே, வழக்கமான பணிகளை துவக்க வேண்டும்.அனைத்து தொழிலாளர்களும், முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினியால், சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X