பொது செய்தி

இந்தியா

ஓய்வு வயதை உயர்த்த பிபின் ராவத் வலியுறுத்தல்

Added : மே 13, 2020
Share
Advertisement

புதுடில்லி : ''முப்படை வீரர்களின் ஓய்வு வயது உயர்த்தப்பட வேண்டும்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

மொத்தம், 14 லட்சம் வீரர்களை உள்ளடக்கிய முப்படையில், ஜே.சி.ஓ., எனப்படும், இளநிலை நியமன அதிகாரி நிலையை எட்டாத வீரர்களுக்கு, 30 - 35 இடைப்பட்ட வயதில், ஓய்வு வழங்கப்படுகிறது. அவ்வீரர்களுக்கு, அடுத்த, 30 ஆண்டுகளுக்கு, ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. நடப்பு, 2020 - 21 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், வீரர்களின் ஓய்வூதியத்திற்கு, 1.33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீரர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

பிபின் ராவத் நேற்று கூறியதாவது:ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கான ஓய்வு வயதை, 58 ஆக உயர்த்த வேண்டும். வீரர்கள், அதிகபட்சமாக, 15 அல்லது, 17 ஆண்டுகள் மட்டுமே, பணியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. 38 வயதில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதால், பயிற்சி பெற்ற மனித சக்தியை நாம் இழந்து வருகிறோம். வீரர்கள், 30 ஆண்டுகளுக்கு ஏன் பணியாற்றக் கூடாது! 38 வயதில் ஓய்வு பெறும் வீரர், தன், 17 ஆண்டுகால பணிக்கு, 30 முதல், 32 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் பெறுகிறார். அந்த வீரர், 38 ஆண்டுகள் பணி செய்து விட்டு, 20 ஆண்டுகளுக்கு மட்டும், ஏன் ஓய்வூதியம் பெறக்கூடாது!

இதற்கான கொள்கை முடிவு விரைவில் எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். பொது மக்களுக்கு வாய்ப்பு!ராணுவத்தில் பொது மக்களும் இணைந்து பணியாற்றும் வகையில், சீர்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. ராணுவத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, பொதுமக்கள் பணியாற்ற வழிவகுக்கும் இந்த பரிந்துரையை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். எனினும், இதில், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X