சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடில் உணவு தானிய சந்தை திறக்க கோரிய வழக்கில், 'நோட்டீஸ்'

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை, கோயம்பேடில், உணவு தானிய சந்தையை திறக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, சி.எம்.டி.ஏ., மற்றும் சந்தை நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விலை அதிகரிக்கும்கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன தலைவர், சந்திரேசன் தாக்கல் செய்த மனு:கோயம்பேடு காய்கறி சந்தையில், சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், வைரஸ் தொற்று சிலருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சந்தை முழுமையாக மூடப்பட்டது. அருகில் உள்ள, உணவு தானிய சந்தையும், தேவையின்றி மூடப்பட்டது.

காய்கறி வியாபாரிகளுக்காக, திருமழிசையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு தானிய வியாபாரிகளுக்கு, மாற்று ஏற்பாடு எதுவும் இல்லை. இதுவும், பொது மக்களுக்கு அத்தியாவசியம் தான்.உணவு தானிய சந்தைக்கு, பொது மக்கள் வர மாட்டார்கள்; சில்லறை வியாபாரிகள் தான் வருவர். எனவே, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, உணவு தானிய சந்தையை இயக்கலாம்.உணவு தானிய சந்தையில் கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியை பின்பற்றி, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, கடைகளை திறக்க, அனுமதிக்க கோரினோம்;

எந்த பதிலும் இல்லை.கடைகள் தொடர்ந்து மூடியிருந்தால், உணவு தானியங்கள் விலை அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவர்.எனவே, கோயம்பேடு உணவு தானிய விற்பனை சந்தையை திறக்கவும், மொத்த வியாபாரத்தை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. தள்ளி வைத்தார் மனு, நீதிபதி, எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், டி.சுந்தரவதனம் ஆஜரானார். சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சார்பில், வழக்கறிஞர், திருவேங்கடம், வருவாய் நிர்வாகம் சார்பில், சிறப்பு பிளீடர், கதிர்வேலு, மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர், பி.டி.ரமாதேவி ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்றனர்.

கோயம்பேடு சந்தை நிர்வாக குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 26க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X