நிருபருக்கு போலீஸ், 'நோட்டீஸ்' 'எடிட்டர்ஸ் கில்டு' கடும் கண்டனம்

Added : மே 13, 2020
Share
Advertisement

புதுடில்லி : குஜராத்தில், இணையதளம் ஆசிரியர் மீது, தேசதத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கும், ஆங்கில நாளிதழ் நிருபருக்கு, டில்லி போலீசார், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளதற்கும், 'எடிட்டர்ஸ் கில்டு' அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், 'பேஸ் ஆப் நேஷன்' என்ற பெயரில், செய்தி இணையதளம் ஒன்றை நடத்தி வரும் தவல் படேல், அந்த இணையதளத்தின் ஆசிரியராகவும் உள்ளார். அதில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில், 'மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால், மாநிலத்தில், முதல்வர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தவல் படேல் மீது, குஜராத் போலீசார், இந்திய தண்டனை சட்டம் - 124ஏ பிரிவின் கீழ், தேசத்துரோக வழக்கும், தவறான செய்தியை பரப்பியதாக, பேரிடர் மேலாண்மை சட்டம், 54வது பிரிவின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

'ஆடியோ சிடி'இதே போல, டில்லியில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் நிருபராக பணியாற்றும் மகேந்தர் சிங் மன்ரால் என்பவர், தப்லிக் - இ - ஜமாத் தலைவர் மவுலானா சாத்தின், 'ஆடியோ சிடி'யில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, செய்தி தந்திருந்தார். இது பற்றி விளக்கம் கேட்டு, மன்ராலுக்கு, டில்லி போலீசார், நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இதையடுத்து, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும், பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஊடகங்களில் பணியாற்றுவோர் மீது, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில், சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை, மத்திய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். குஜராத்தில், இணையதள ஆசிரியர் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. முக்கியத்துவம் அதேபோல், ஆங்கில நாளிதழ் நிருபருக்கு, டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதும், கண்டனத்துக்குரியது. இரண்டுமே, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள். ஜனநாயகத்தில், ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை, போலீசார் உணர வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X