துபாயின் கோல்ட் சூக்கில் திறக்கப்பட்ட 500 கடைகள்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

துபாய் : கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து, துபாயின் கோல்ட் சூக்கில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு சற்று கூடுதலாக பரவி வருகிறது. இதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டது. துபாயில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அதற்கு மத்தியில் கோல்ட் சூக்கில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் மீண்டும் வர துவங்கினர். பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே துபாயில் கோல்ட் சூக் பார்வையாளர்களை மீண்டும் வரவேற்கிறது.


latest tamil news



இது தொடர்பாக துபாய் மீடியா ஆபிஸ் டுவிட்டரில் பதிவிட்டதாவது : “துபாயில் கோல்ட் சூக்கில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் , கொரோனா ஊரடங்குகளை தொடர்ந்து மீண்டும் திறக்கப்படுகின்றன, மேலும் அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்கான கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில்திறக்கப்பட்டது ”. இவ்வாறு பதிவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-மே-202004:18:22 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவிலிருந்து நகை வாங்க அங்கு செல்லலாமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X