ஆமதாபாத் : குஜராத்தில், கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா, பொது தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது' என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், கல்வி மற்றம் சட்டத்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா, 2017ல் நடந்த பொது தேர்தலில், தோலக்கியா தொகுதியில், 327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.'தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால், இவரது வெற்றி செல்லாது' என, உத்தரவிடக்கோரி, காங்., சார்பில் போட்டியிட்ட, அஸ்வின் ரத்தோட், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பரேஷ் உபாத்யாய், 'தோலக்கியா தொகுதியில், அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமாவின் வெற்றி செல்லாது' என, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, பூபேந்திரசிங் சூடாசாமா தரப்பில், நேற்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தலில் முறைகேடுகள் நடந்தாக கூறிய, காங்., வேட்பாளர் அஸ்வின் ரத்தோட், உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை. இதனால், தோலக்கியா தொகுதியில் வெற்றி பெற்றவராக, அவரை அறிவிக்க உரிமை இல்லை. எனவே, தேர்தலில் என் வெற்றி செல்லாது என, அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE