தெருவில் தேங்கும் கழிவு நீர்| Dinamalar

தெருவில் தேங்கும் கழிவு நீர்

Added : மே 13, 2020
Share
 தெருவில் தேங்கும் கழிவு  நீர்

கமுதி:கமுதி அருகே 1,200 குடும்பங்கள் வசிக்கும் ராமசாமிபட்டியில் 25க்கும் மேற்பட்ட தெருக்கள்உள்ளது.

தெருக்களில் சிமென்ட் ரோடுகள் அமைக்கப்பட்டாலும், வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் மழை நீர், கழிவு நீர் செல்ல வடிகால் வசதியில்லை.இதனால் மழை நீரோடு கழிவு நீரும் சேர்ந்து தெருக்கள், பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.கொரோனா பீதியில் கழிவு நீர் துர்நாற்றத்தால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X