டில்லியில் வாகனங்கள் கிடைக்காமல் சிறப்பு ரயிலில் வந்த பயணியர் தவிப்பு

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வையடுத்து, சிறப்பு ரயில்கள் மூலம் டில்லி வந்த பயணியர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, பேருந்து, வாடகை கார் கிடைக்காமல் தவித்தனர்.

கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே, சில ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. மகிழ்ச்சிஇதன்படி, ஆமதாபாத், பாட்னா மற்றும் மும்பையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு டில்லி வந்தடைந்தன.ரயில்களில் வந்த பயணியர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மகிழ்ச்சியில் இருந்தனர்.ஆனால், டில்லி ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தவுடன், அவர்களில் பலருக்கும், சந்தோஷத்தை தொலைக்கும் நிலை ஏற்பட்டது.ஏனெனில், அவர்களுக்கு நகர பேருந்து, வாடகை கார், ஆட்டோ உள்ளிட்ட, வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், ஏராளமான உடைமைகளுடன் வந்திருந்த அவர்கள், சாலை ஓரங்களில் தவித்தனர்.மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் ரயிலில் வந்த விஷ்ணு, 24, கூறும்போது, ''ஆமதாபாதில் இருந்து டில்லி வருவதற்கான ரயில் கட்டணம், 1,750 ரூபாய் தான். ''ஆனால், நாங்கள் ஆமதாபாத் ரயில் நிலையத்திற்கு, 1,800 ரூபாய் கொடுத்து, வாடகை வேனில் வந்தோம். இங்கு, மேற்கு டில்லியில் உள்ள ரவி நகருக்கு செல்ல வாகனம் கிடைக்கவில்லை,'' என்றார். பெரும் சிரமம்பீஹாரின் பெகுசராய் மாவட்டத்தில் இருந்து, தன், 60 வயது தந்தையுடன் வந்த ரத்னக்கர், ''டில்லியில் பொது போக்குவரத்து இல்லை என, எங்களுக்கு தெரியாது. ''இந்த வசதிகள் இல்லாமல், ஏன் ரயில்களை இயக்க தொடங்கினர் என, புரியவில்லை.

நாங்கள் நடந்தாலும், உத்தம் நகரில் உள்ள வீட்டிற்கு, மாலை தான் சென்றடைய முடியும்,'' என்றார். ரயில் நிலையத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான கி.மீ., செல்ல வேண்டியவர்களுக்கு, உணவும், குடிநீரும் கிடைக்கவில்லை. இதனால், குழந்தைகளுடன் வந்தவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
14-மே-202005:21:48 IST Report Abuse
வாய்மையே வெல்லும் டில்லி முதல்வர் கெஜிரிவால் தூங்கிவிட்டார்... அதான் பஸ் இயக்க கூட அவருக்கு தோணவில்லை.. எல்லாம் அவலக்ஷணமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X