இன்ஜி., கல்லுாரி ஊழியர்களுக்குஊதியம் வழங்க உத்தரவுபுதுடில்லி: நாட்டில் உள்ள, சில தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என, புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 'அனைத்து தனியார் பொறியியல் கல்லுாரிகள், தொழில்நுட்ப கல்விக் கூடங்களும், முழு அடைப்பு காலகட்டத்தில், தங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, தவறாமல் வழங்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில் கல்வி கவுன்சில், உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீரில் துப்பாக்கி சூடுவாகன ஓட்டி பலிஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீர், புட்காம் மாவட்டத்தின், கவூஸா என்ற இடத்தில், சி.ஆர்.பி.எப்., போலீசார், நேற்று காலை, வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை, நிறுத்துமாறு போலீசார் கை காட்டினார். ஆனால், ஓட்டுனர் நிற்காமல் சென்றதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், வாகனத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஓட்டுனர் மீது குண்டு பாய்ந்து இறந்தார். அவர் பெயர், மெஹ்ராஜுதீன் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-'மாஜி' காங்., பிரமுகருக்குஜாமின் மறுப்புபுதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை சம்பவத்துக்குப் பின், சீக்கியர்களுக்கு எதிராக, டில்லியில் ஏற்பட்ட கலவரத்தில், பலர் கொல்லப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட, காங்., முன்னாள் பிரமுகர் சஜ்ஜன் குமாருக்கு, டில்லி உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை அளித்தது. இந்நிலையில், தன் உடல்நிலையை காரணம் காட்டி, ஜாமின் வழங்குமாறு, சஜ்ஜன் குமார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஜ்ஜன் குமாரின் மருத்துவ அறிக்கைகளை பார்த்த நீதிபதிகள், தற்போது மருத்துவமனை சிகிச்சை தேவையில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.--
--நாடு கடத்தல் வழக்கில்குற்றவாளிக்கு ஜாமின்புதுடில்லி: டில்லியை சேர்ந்த ராமிந்தர் சிங் என்பவர், 2012ல், ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் பணியாற்றினார். அப்போது, அவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியா வந்த ராமிந்தர், 2015ல் கைது செய்யப்பட்டார். அவரை, ஸ்காட்லாந்துக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராமிந்தர் சிங்குக்கு, 45 நாட்கள் நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.--
--ஊர் திரும்பாத தொழிலாளருக்குதலா ரூ.10 ஆயிரம்கொஹிமா: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தை சேர்ந்த, 18 ஆயிரம் தொழிலாளர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்தனர். நாகாலாந்தில், கொரோனா தனி சிகிச்சை முகாம்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதையடுத்து, ஊர் திரும்பாத தொழிலாளர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என, நாகாலாந்து அரசு அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE