பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் செய்ய திருவடிசூலத்தில் கோரிக்கை

Added : மே 13, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம், ஞானபுரீஸ்வரர் கோவில் வளாகம் அருகில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது.இங்கு, திருவடிசூலம், குண்ணவாக்கம், புலிகுடிவனம் உட்பட, 10க்கும் மேற்பட்ட, கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை, விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.

துவக்கத்தில், நெல்லை கொள்முதல் செய்த அதிகாரிகள், சில நாட்களாக கொள்முதல் செய்யாததால், நிலையத்தில், நெல் குவித்து வைக்கப்பட்டுஉள்ளது. இதை, அதிகாரிகள் எடுக்காததால், மழையில் நனைந்து, நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், விவசாயிகள் நெல்லை வாங்காமல், தனியார் வியாபாரிகள் எடுத்து வரும் நெல்லை மட்டும் அதிகாரிகள் வாங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.என-வே, விவசாயிகள் நலன் கருதி, குவித்து வைத்துள்ள நெல்லை, உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


பணம் கொடுத்தால் வேலை


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, கிதிரிப்பேட்டை நெய்குப்பத்தில் செயல்படும், அரசு கொள்முதல் நிலையத்தில், வியாபாரிகளின் நெல்லை, அதிகாரிகள் கூடுதலாக கொள்முதல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.காவாந்தண்டலம் விவசாயி சீனிவாசன் கூறியதாவது:அவளூரில் இயங்கும் கொள்முதல் நிலையத்தில், நிறைய நெல் இருக்கிறது என, கிதிரிப்பேட்டை நெய்குப்பத்தில், விற்பனைக்கு, நெல் கொட்டி இருந்தேன். ஒரு மூட்டைக்கு, 100 ரூபாய் கொடுக்கும் வியாபாரிகளின் நெல்லை மட்டுமே, அதிகாரிகள் எடை போடுகின்றனர். மூட்டைக்கு, 65 ரூபாய் கொடுத்தால், எடை போடுவதில் தாமதப்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம்தான், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X