கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிவாரண நிதிக்கு ரூ.20ஆயிரம் வக்கீலுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : மே 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : 'மதுபானங்களை ரொக்க விற்பனை செய்யக்கூடாது' என, கோரிய வழக்கறிஞர், முதல்வர் நிவாரண நிதிக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:'டாஸ்மாக்' கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு, ரசீது வழங்கப்படுவது இல்லை; கூடுதல் விலைக்கு விற்கின்றனர். எனவே, மது கடைகள் திறப்பதற்கு முன், விற்பனைக்காக, 'மொபைல் ஆப்' செயலி மற்றும் இணையதளம் உருவாக்க வேண்டும்.மதுபானங்களை, ரொக்கத்திற்கு விற்பனை செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும். சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க, தனி தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''தகவல்களை முறையாக ஆய்வு செய்யாமல், மாறி மாறி வழக்கு தாக்கல் செய்கிறார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், முதல்வரின் நிவாரண நிதிக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202012:49:16 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பெயர் வர அநாவசிய வழக்குப் போடும் அடாவடி வழக்கறிஞர்களுக்கு நீதி மன்றம் சரியான பாடம் கற்பித்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X