பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர தொழிலாளர்களை எதிர்பார்க்கும் விவசாயிகள்

Added : மே 13, 2020
Share
Advertisement

பொன்னேரி : நடவுப் பணிகளுக்காக, ஆந்திர கூலித் தொழிலாளர்களின் வருகையை எதிர்ப்பார்த்து, விவ சாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.

மீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொண்டு உள்ளனர். கை நடவு பணிகளுக்காக, நாற்று வளர்த்து வருகின்றனர்.ஆந்திர விவசாய கூலித் தொழிலாளர்களை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், அவர்களின் வருகை கேள்விக்குறியாகி உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:உள்ளூரில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

நுாறு நாள் பணிகளுக்கு செல்பவர்கள், விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆந்திர விவசாய தொழிலாளர்கள் இல்லையெனில், விவசாயம் செய்வதே கடினம். தற்போது, நடவுப் பணிகள் துவங்க உள்ளோம்.வேளாண் துறையினர், ஆந்திர தொழிலாளர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X