கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணவி கொலை: சி.பி.ஐ., விசாரணை கோரி மனு

Added : மே 13, 2020
Share
Advertisement
சென்னை : மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை காலனியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ; பெட்ரோல் ஊற்றி, எரித்து கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில், அ.தி.மு.க., பிரமுகர்கள், கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைது

சென்னை : மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை காலனியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ; பெட்ரோல் ஊற்றி, எரித்து கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில், அ.தி.மு.க., பிரமுகர்கள், கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவெண்ணைய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், சென்னை, ஆவடியை சேர்ந்த, சுமதி என்பவர் தாக்கல் செய்த மனு: சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது.

மாநில போலீசார் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. பொது மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.எனவே, இந்த வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும். மாநில போலீசார், நியாய மான விசாரணையை மேற்கொள்வார்களா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு, இந்த வழக்கை மாற்ற, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X