சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை முற்றுகையிட்ட ஏகாட்டூர் ஊராட்சி மக்கள்

Added : மே 13, 2020
Share
Advertisement

ஏகாட்டூர் : ஏகாட்டூர் ஏரியில், குடிமராமத்து பணி செய்ய வந்த அதிகாரிகளை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 60 ஏக்கர் ஏகாட்டூர் ஏரி உள்ளது. இந்த ஏரி, இரண்டு முறை சவுடு மணல் அள்ள டெண்டர் விடப்பட்டு, தற்போது பள்ளத்தாக்காக மாறியுள்ளது.இந்நிலையில், தற்போது, இந்த ஏகாட்டூர் ஏரி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறையினர், 59.50 லட்சம் மதிப்பில், குடிமராமத்து பணிகளின் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டனர்.இதையடுத்து, நேற்று, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில், அதிகாரிகள் ஏகாட்டூர் ஏரியில் குடிமராமத்து பணிகளை, பூஜை போட்டு துவக்கி வைத்தனர்.

பின், அவர்கள், பொதுமக்களிடம், ஏரியின் கரைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள், மதகுகள் சீரமைக்கப்படும் என, கூறினார்.அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள், ஏரியில் சவுடு மணல் எடுக்க, டெண்டர் விடப்பட்டதில் பள்ளத்தாக்காக மாறியுள்ள ஏரியை சீரமைக்கும் பணியை, முதலில் மேற்கொள்ளுங்கள் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அதிகாரிகள் பொதுமக்களிடம் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற அரசிடம் எடுத்து கூறி, உத்தரவு வந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சமாளித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X