5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்

Added : மே 13, 2020
Share

திருவள்ளூர் : மாவட்டத்தில், கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர, பிற பகுதிகளில், பெரிய மற்றும் சிறு, நடுத்தர என, மொத்தம், 5,971 நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியை துவங்கி உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவில், கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் தொடர் தொழில்கள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, பிற பகுதிகளில் உள்ள, 163 பெரிய தொழில் நிறுவனம்; 5,808 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் என, மொத்தம், 5,971 நிறுவனங்கள், தற்போது, மீண்டும் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளன என, திருவள்ளூர் கலெக்டர், மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X