கல்பாக்கம் கால்வாயில் இறந்து மிதந்த மீன்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் கால்வாயில் இறந்து மிதந்த மீன்கள்

Added : மே 13, 2020
Share

மாமல்லபுரம் : கல்பாக்கம், பக்கிங்ஹாம் முகத்துவார கால்வாயில், மீன்கள் இறந்து கிடந்தன.கல்பாக்கம் நகரிய பகுதியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கடலில் கலக்கும், முகத்துவாரம் உள்ளது. இப்பகுதி கால்வாயில், பல வகை மீன்கள், இறால் என பெருகி, சுற்றுப்புற மீனவர்கள், பிடித்து விற்பர். தற்போது, ஊரடங்கு சூழலிலும், மீன் பிடிக்கின்றனர்.நேற்று காலை, மீன் பிடிக்க சென்ற போது, கிழங்கான் உள்ளிட்ட மீன்கள், குவியல் குவியலாக, கால்வாயில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். கால்வாயில் நச்சுத் தன்மை தண்ணீர் கலந்து, அவை இறந்திருக்கலாம் என, மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X