சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழங்களை துாக்கி வீசியது ஏன்?

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : 'தெருவோர கடைகளில் இருந்த பழங்களை துாக்கி வீசிய, வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீது, ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது' என, மாநில மனித உரிமைகள் ஆணையம், கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில், சமூக இடைவெளியை பின்பற்றாமல், பழ வியாபாரம் செய்ததாக கூறி, அடுக்கி வைத்திருந்த பழங்களை, வாணியம்பாடி நகராட்சி கமிஷனர், சிசில் தாமஸ், துாக்கி வீசி, தள்ளுவண்டியை கவிழ்த்து விடுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்த வழக்கை, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர், துரை ஜெயசந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர், விசாரணைக்கு ஏற்றுள்ளனர் .

பின், நகராட்சி நிர்வாக கமிஷனர் மற்றும் வாணியம்பாடி நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:சாலையோர வியாபாரிகள் மற்றும் பழ வியாபாரிகள், ஊரடங்கு உத்தரவை மீறி இருந்தால், அவர்கள் மீது, சட்டத்துக்கு உட்பட்டு, நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தில், நகராட்சி கமிஷனர், தன் அதிகாரம் மற்றும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார். அவர் நடந்து கொண்டது, மனித உரிமை மீறல் ஆகாதா... இதற்காக அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X