அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அரசு தலைமை செயலர் அவமானப்படுத்தி விட்டார்'

Added : மே 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை : அரசு தலைமை செயலர் சண்முகம், தங்களை அவமானப்படுத்தியதாக, தி.மு.க., - எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். \

தி.மு.க., சார்பில், 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில், பொது மக்களுக்கு உதவுவதற்காக, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். அரசால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்ற, கோரிக்கை மனுக்களை, அரசிடம் அளித்து வருகின்றனர்.அதன்படி, தி.மு.க.,- - எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி ஆகியோர், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, தலைமை செயலர் சண்முகத்தை சந்தித்தனர்.

அப்போது, 44 பெட்டிகளில் எடுத்து செல்லப்பட்ட, ஒரு லட்சம் மனுக்களை, அவரிடம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், டி.ஆர்.பாலு கூறியதாவது:மக்களுக்கு உதவுவதற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தி.மு.க., அலுவலகத்திற்கு, 15 லட்சம் கோரிக்கை மனுக்கள் வந்தன.உணவு, உடை போன்றவை கேட்டு வந்த மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் உத்தரவிட்டார்; கட்சியினர் நிறைவேற்றினர்.

ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள், கட்சியினரால் செய்ய முடியாதவை; அரசு மட்டும் செய்யக்கூடியவை. அந்த பணிகளை, அரசு செய்ய வலியுறுத்தி, தலைமை செயலரிடம் வழங்கினோம். அவர் சரியான பதில் தரவில்லை; எங்களை உதாசீனப்படுத்தினார். மூன்றாம் தர மக்களை நடத்துவது போல நடத்தினார்.இவ்வாறு, அவர் கூறினார்.தயாநிதி கூறுகையில், ''உங்களை மாதிரி ஆட்களால் தான் பிரச்னை என, தலைமை செயலர் கூறினார். ''நாங்கள் பேசுகையில், 'டிவி' சத்தத்தை கூட குறைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்துவது போல் செயல்பட்டார். ''அரசு செய்ய வேண்டியதை, ஸ்டாலின் செய்ததால், தலைமை செயலருக்கு பொறாமையாக உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
14-மே-202019:55:55 IST Report Abuse
Arachi You don't think properly and you don't allow others also think properly.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மே-202018:31:20 IST Report Abuse
ஆரூர் ரங் அட தீய்முக 😎ஆட்களுக்கு மானம் இருக்குதாம். 😎சொல்லவேல்ல 😎
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மே-202015:35:43 IST Report Abuse
ஆரூர் ரங் ஒசிச்சோறுகளே ஒன்றிணைவோம் வா. இதுதான் உள்ளர்த்தம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X