சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு, 9,227 ஆக உயர்வு

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனாவால், 9,227 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான்கு மாவட்டங்கள், பாதிப்பில்லாத பச்சை நிற மண்டலத்திற்கு மாறி உள்ளன. மேலும், ஒரு சில மாவட்டங்கள், பச்சை நிறத்திற்கு மாற உள்ளன.

இது குறித்து, சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் தற்போது, கொரோனா அறிகுறியுடன், 4,623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 12 ஆயிரத்து, 666 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 509 பேருக்கு, நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில், ௩௮௦ பேர் சென்னையை சேர்ந்தவர்கள். திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா, 25 பேர், திருவண்ணாமலையில், 23 பேர், கடலுாரில், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 2.68 லட்சம் பேருக்கு, மாநிலம் முழுதும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில், சென்னையில் மட்டும், 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, 14 நாட்களுக்கும் மேலாக, தொற்று கண்டறியப்படாத, நான்கு மாவட்டங்கள், பச்சை நிற மண்டலத்திற்கு மாறியுள்ளன. அதில், ஈரோடு மாவட்டத்தில், 70 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 69 பேர் குணமடைந்துள்ளனர்;

ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 146ல், ஒருவர் உயிரிழந்தார்; மற்ற அனைவரும் குணம்அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 12 பேரும் குணமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 114 பேரும் குணமடைந்தனர். மேலும், சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் தொற்று பரவல் தடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களும் விரைவில், பச்சை நிறத்துக்கு மாற உள்ளன. இந்நிலையில், நேற்று, 42 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதையும் சேர்த்து மொத்தம், 2,176 பேர் குணமடைந்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சென்னையை சேர்ந்த, 41 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் இருந்து, கடைசி நேரத்தில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த, 43 வயது நபர், நேற்று உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 48 வயது நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இம்மூவருக்கும், கொரோனா பாதிப்புடன், வேறு வகையான நோய்களும் இருந்தன. இதன் வாயிலாக, உயிரிழப்பு எண்ணிக்கை, 64 ஆகியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நோயாளிகள் 'டிஸ்சார்ஜ்'கொரோனா பாதித்த புற்றுநோயாளிகள், 22 பேர், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்; அதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் குணமடைந்தனர். அதேபோல, சிறுநீரகம் செயலிழந்த, 15 பேர்; கல்லீரல் செயலிழந்த, இரண்டு பேர்; எச்.ஐ.வி., நோயாளிகள், இரண்டு பேர், கொரோனாவின் பிடியில் இருந்து தப்பியுள்ளனர்.பிரசவித்தவர்கள் நலம்! சென்னை, கஸ்துாரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில், 25 கர்ப்பிணியர், கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். அதில், 12 பேருக்கு பிரசவம் நடந்தது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த, ஒன்பது பேர், நேற்று குழந்தைகளுடன் வீடுகளுக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X