பொது செய்தி

தமிழ்நாடு

மின் தேவைக்காக அதிகாரிகள் ஆய்வு

Added : மே 13, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : கொரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 572 தொழிற்சாலைகள், பல்வேறு நிபந்தனைகளுடன் இயங்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கோடை காலம் துவங்கியுள்ளதால், குடியிருப்புகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக, மின் வாரியத்தினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராகவன், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், துணை மின் நிலையங்களை, நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, மின் கட்டமைப்பு மேலாண்மை, மின் தடங்கள், தேவை அதிகரிப்பு மற்றும் மின் உபகரணம் பராமரிப்பு குறித்து, பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய செயற்பொறியாளர், சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X