கபசுர குடிநீர் வழங்கும் பணி நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கும் பணி நிறுத்தம்

Added : மே 13, 2020
Share
திருத்தணி : திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கிய கபசுர குடிநீர், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், நகராட்சி அலுவலகம், 'அம்மா' உணவகம் மற்றும் வருவாய் துறை அலுவலகம் ஆகிய இடங்களில், கபசுர குடிநீர் கேன்கள் வைத்து, பொதுமக்களுக்கு, 12 நாட்களாக வழங்கியது.திருத்தணி மற்றும் திருவாலங்காடு

திருத்தணி : திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கிய கபசுர குடிநீர், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், நகராட்சி அலுவலகம், 'அம்மா' உணவகம் மற்றும் வருவாய் துறை அலுவலகம் ஆகிய இடங்களில், கபசுர குடிநீர் கேன்கள் வைத்து, பொதுமக்களுக்கு, 12 நாட்களாக வழங்கியது.திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் கொரோனா தொற்றுக்கு, 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கபசுர குடிநீர் வழங்கும் பணியை, நகராட்சி நிர்வாகம் திடீரென நிறுத்தியது, மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் தற்போது இருப்பு இல்லாததால், பொதுமக்களுக்கு வழங்க முடியவில்லை. ஓரிரு நாட்களில் மீண்டும் வினியோகம் செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X