செங்கல்பட்டில் புதிதாக, 25 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் புதிதாக, 25 பேருக்கு கொரோனா

Added : மே 13, 2020
Share

செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக, 25 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் - தலா ஏழு; வண்டலுார் - இரண்டு, திருப்போரூர், மதுராந்தகம் தாலுகா - தலா ஒன்று என, 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 416 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, 52 வயது நபர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார். மாவட்டத்தில், இறந்தோரின் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்துள்ளது.


திருவள்ளூர்


திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 467 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 83 பேர், இதுவரை சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி உள்ளனர்; மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம் மற்றும் புழல் பகுதிகளைச் சேர்ந்த, 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை, 492 ஆக உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார் தாலுகாவில், இரு பெண்கள், ஓர் ஆண், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது, கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஆதனுாரில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஆண், சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.இவருடன் சேர்த்து, கொரோனா பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 160 ஆக உயர்ந்துள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X