பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மண் வள அட்டை

Added : மே 13, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 8,100 விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வு அடிப்படையில், மண் வள அட்டை வழங்கப்பட உள்ளது.இதற்காக, ஒவ்வொரு வட்டாரத்திலும், தலா, 5 கிராமம் வீதம், மொத்தம், 70 கிராமங்களில், 8,100 மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, இந்த அட்டைகள் வழங்கப்படும். இந்த மண் வள அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனையின்படி, பயிர் சாகுபடி செய்வதால், உரச் செலவு குறையும். அதிகமான ரசாயன உரங்கள் இடுவதால், ஏற்படும் மண் வள சேதமும் குறையும்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதர கிராம விவசாயிகள், ஆய்வுக் கட்டணமாக, 20 ரூபாய் செலுத்த வேண்டும்.திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேளாண் இணை இயக்குனர் சம்பத்குமார், துணை இயக்குனர் சுரேஷ் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X